
வாடகை தாய் பின்னணியில் உணர்வுப்பூர்வமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவினில்… தயாரிப்பாளர் பிரபு திலக் பேசியபோது
“இங்கு உங்களை சந்திப்பது மிக மகிழ்ச்சி. இப்போது திரைத்துறை மிக நன்றாக இருக்கிறது. பெரிய படங்கள் மட்டுமே ஓடும் என்ற நிலையில் லவ் டுடே போன்ற படங்கள் ஓடுவது பெரிய நம்பிக்கை தருகிறது. பேபல் என்றொரு படம் வந்துள்ளது அந்த படத்தில் வேறு வேறு நாடுகளில் நடக்கும் சம்பவங்கள் ஒருவரையொருவர் எப்படி பாதிக்கும் என சொல்லியிருப்பார்கள். அதே போல் தான் நம் வாழ்க்கையும் என நினைக்கிறேன். இந்தப்படமும் அது போல் தான். மிக நல்ல திரைக்கதை. இப்படத்தை நான் வெளியிடுகிறேன். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக படம் பிடிக்கும் நன்றி.”என்று கூறினார்.
தயாரிப்பாளர் ராஜாதாஸ் குரியாஸ், இசையமைப்பாளர் ரெஞ்சின் ராஜ் ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷ் நடிகை பவித்ரா லக்ஷ்மி ஆகியோர் பேசினார்கள்.
கதாசிரியர் பாக்கியராஜ் பேசுகையில் ” ஜாக் எந்த ஒரு சின்ன விசயத்திலும் என்னை ஆலோசனை கேட்பார் அவரது அன்புக்கு நன்றி. யசோதா படம் வாடகை தாய் கதை என்றவுடன் கொஞ்சம் பயமாக இருந்தது ஆனால் படம் பார்த்த பிறகு நிம்மதி வந்தது. ஏனெனில் அது முழுக்க வேற கதை. இப்படம் மனித உறவுகளை பற்றிய கதை. இதில் எமோஷன் நிறைய இருக்கும். தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸை இப்படம் ஏமாற்றாது. அனைவரும் படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.”என்று கேட்டுக்கொண்டார்.
நடிகர் கதிர் ஆகியோரும் பேசினார்கள்.முன்னாள் காவல்துறை அதிகாரி திலகவதி பேசும்போது ,”மேடை இளம் திறமையாளர்களால் நிறைந்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் திறமையாளர்கள் இணைந்து வேலை செய்துள்ளார்கள். படம் மிக நன்றாக வந்துள்ளது. திரைப்படம் பார்ப்பவரிடத்தில் பெரும் பாதிப்பை தரும் ஒன்று. நல்ல கருத்துக்கள் கூறும் படங்கள் வர வேண்டும். இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.”என்று நல்லாசி வழங்கினார்.