கரு நிறத்து எருதுவுக்கு பெயர் காரி என்பார்கள் தமிழர்கள்.
சனிக்கிழமையையும் காரி என்றே தமிழர்கள் அழைத்தார்கள். வாழ்வியலோடு இணைந்த வீர விளையாட்டுக்கும் காளைக்கும் தொடர்பு உண்டு.
இந்த பிணைப்பு ‘காரி’ திரைப்படத்தில் தெள்ளத் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது .ஜல்லிக்கட்டு தமிழரின் உயிருடன் கலந்த வீர விளையாட்டு.
ஒன்று பட்டிருந்த ஒரு காலத்திய முகவை மாவட்டத்திலுள்ள இரண்டு கிராமங்களுக்கு இடையில் போட்டி..அரிவாள் குத்தீட்டி என மோதலாய் தவிர்த்து ஒரு போட்டி. இரு கிராமத்து மக்களும் வழிபடுகின்ற பொதுவான கோவிலை நிர்வகிப்பது யார்?
வை ஜல்லிக்கட்டை ! இது கிராமமும் பொருதட்டும்! வெற்றி பெறுகிற கிராமம் கோவிலை நிர்வகிக்கட்டும்.
ஜல்லிக்கட்டு நடந்ததா ,வைகையின் கடைக்கோடி கிராமத்துக்கு வரவிருந்த பேராபத்து நீங்கியதா ,அடங்காத காளையை அடக்கினார்களா ,என்பதுதான் விறுவிறுப்பான படமாக திரையில் ஓடுகிறது.
கதையின் நாயகன் சசிகுமார் ,அடிப்படையில் ஒரு ஜாக்கி.பந்தயக்குதிரை ஓட்டுகிறவர் .இதுவே அவருக்கு காளைகளுடன் நெருங்குவதற்கு வசதியாகிவிடுகிறது. காளைகளை அடக்குவதற்கான நெளிவு சுழிவுகளை கற்றுக்கொள்கிறார்.பார்வதி அருணுக்கு நல்ல எதிர்கால இருக்கிறது. இவரது காதல் அழகாக சொல்லப்படுகிறது. காளைக்காக பதறுகிற இடத்தில் துடிக்க வைத்து விடுகிறார் .
தொடக்கத்தில் சசிகுமாரின் அப்பா ஆடுகளம் நரேனின் கொடிதான் பறக்கிறது.
இறைச்சிக்காக மாடுகளை வாங்கி தொழில் நடத்துகிற ஜெ.டி சக்ரவர்த்தி சற்று மிகையான நடிப்பை கொட்டியிருக்கிறார் .மாட்டு இறைச்சியின் ருசியை பற்றி விளக்குகிற போது சற்று அடக்கம் காட்டியிருக்க வேண்டும்.
நகைச்சுவைக்கு ரெடின்கிங்ஸ்லி .
இமானின் இசை சுகம்,எங்கும் ஒளி பிறக்குமே பாடல் சிலிர்ப்பு.
கணேஷ்சந்திராவின் ஒளிப்பதிவு கிராமியத்து வாழ்க்கையையும் ஜல்லிக்கட்டு பரபரப்பையும் அழகாக படமாக்கியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருப்பவர் ஹேமந்த், மறந்து விட்ட தமிழரின் பெருமைகளை நினைவுருத்தியிருக்கிறார் .வசனங்களை கேட்கிறபோது உண்மையான தமிழன் சிலிர்த்து எழுவான்.
காரி .மறுபடியும் பார்க்க வேண்டும் என்கிற உணர்வு ,!