ஊருக்காக கபடி விளையாடி பெருமை சேர்த்ததாக கபடி வீரர் பொத்தாரிக்கு கிராமிய சபை அலுவலகம் முன்பாக சிலை வைத்து மரியாதை செய்கிறார்கள்..
அதே சிலை உடைத்தெறியப்படுகிறபோது அண்ணா சாலை கலைஞர் சிலை உடைப்பு நினைவுக்கு வருகிறது.
பொத்தாரி ராஜ்கிரண் சிலை ஏன் உடைபட வேண்டும். யார் அவர் ? சிலை வைக்கிற அளவுக்கு நிலை உயர்ந்திருந்த மனிதர் என்ன தவறிழைத்தார் என்று கிராமத்தில் ஒரு பிரிவினர் சினம் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இவைகளுக்கு பதில் சொல்கிற படம்தான் பட்டத்து அரசன்.!
வீரமும் விவேகமும் கலந்த முதியவர் வேடம் என்றால் கூசாமல் கூப்பிடு என்கிற சிறப்பு அழைப்புக்கு உரியவர் ராஜ்கிரண். கபடி விளையாட்டின் பிடி வரிசைகளை நன்றாக அறிந்தவர் இந்த பொத்தாரி .,
ராஜ்கிரண் பொருந்துகிறார் .
தஞ்சை மாவட்டமே பாராட்டுகிற வீரர். கன்னத்தில் உதைத்த கபடி வீரரை லாவகமுடன் வளைத்துப்பிடித்து வீழ்த்தியபோது ராஜ்கிரண் காட்டும் பாவனை வெகு சிறப்பு,!
கதாசிரியர்களுக்கு இரு தார கதை என்றால் இனிப்பு சாப்பிடுவதைப்போல. பங்காளி சண்டையை எப்படியேனும் கொண்டுவந்து விடுவார்கள். அப்படி பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஆகாத மருமகளாக ராதிகா. இவரது பாசமிகு மகனாக அதர்வா.!இந்த சின்னஞ்சிறிய குடும்பத்தை ஒதுக்குகிறது பொத்தாரியின் பெரிய குடும்பம்..இந்த மொத்த குடும்பத்தையும் ஊர் ஒதுக்கும் போதுதான் அதர்வாவின் சேவை தேவை.! இப்படி திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் சற்குணம்.!
தாத்தாவின் குடும்பத்துடன் சேரவேண்டும் என்கிற அடங்காத ஆசை பாசம் என அதர்வா.
இவரது காதலியாக ஆஷிகா ரங்கநாத், தமிழ்த்திரையில் இடம் பிடித்துவிடுவார்.கவனம் ஈர்க்கிற அளவுக்கு அழகும் கவர்ச்சியும் ! செம.!
ராதிகா ,ஜெயபிரகாஷ்,சிங்கம் புலி ,துரை சுதாகர் ,பால சரவணன் என நட்சத்திர பட்டாளம்.
லோகநாதன் சீனிவாசனின் ஒளிப்பதிவு,ஜிப்ரானின் இசை ,கதைக்கு துணையாக இருக்கிறது..
நல்ல கதையை கொடுத்திருக்கிறார் சற்குணம்.