சில நேரங்களில் விதி கடுமையாக விளையாடி விடும்.
அப்படித்தான் ஒரு விநியோகஸ்தர் நடிகை நயன்தாராவை நம்பி ஒரு படத்தை வாங்கியிருந்தார். அவர் வேறு யாருமல்லர் ,மாநாடு படத்தை வாங்கிய கோவை சுப்பையாதான்.!
இயக்குநர் அல்போன்ஸ்புத்திரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் கோல்டு.
மலையாளம் , தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்தப்படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.
இப்படம் ஓணம் பண்டிகையையொட்டி செப்டம்பர் 8 ஆம் தேதி மலையாளம் தமிழில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது.
கோவை சுப்பையா இந்தப்படத்தைத் தமிழில் வெளியிடும் உரிமையைப் பெற்றிருந்தார்.அதற்காக அவர் கொடுத்த விலை சுமார் தொண்ணூறு இலட்சம்.
ஆனால், ஓணம் பண்டிகையில் படம் வெளியாகவில்லை.
, டிசம்பர் ஒன்றாம் தேதி (இன்று) அப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இன்றும் அந்தப்படம் தமிழில் வெளியாகவில்லை. மலையாளத்தில் மட்டும் வெளியாகிறது.
தமிழ் உரிமை வாங்கிய கோவை சுப்பையா வயிற்றில் கடா புடா சத்தம்.!. மலையாளத்தில் ஓகே என்றால் தப்பிக்கலாம் .
அங்கு சுருண்டு விட்டால் இங்கும் படுத்து விடுகிரா ஆபத்து இருக்கிறது.
இதனால் இன்று கேரளாவில் வெளியாகும் கோல்டு படத்தின் முடிவுக்காகக் கண் துஞ்சாமல் காத்திருக்கிறாராம் கோவைசுப்பையா.பாவம்யா!