நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில்,ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2. படப்பிடிப்பில் விபத்து தயாரிப்பு தரப்பு இயக்குனர் உரசல்,கொரோனா ஊரடங்கு ,ராம்சரண் புதிய படம் என எல்லாவற்றையும் கடந்து தற்போது மீண்டும் இதன் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது..அதாவது இயக்குநர் ஷங்கர், ஒரே நேரத்தில் மாதத்தில் 20 நாட்கள் என பிரித்துக்கொண்டு கமல் மற்றும் ராம்சரண் படங்களை இயக்கி வருகிறார்.
கடந்த இரு வாரங்களாக ராம்சரணின் படப்பிடிப்புக்காக நியூசிலாந்து சென்றிருந்த இயக்குனர் ஷங்கர் கடந்த 3ம் தேதி சென்னை திரும்பிய நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தொடர்ந்து வரும் 20ம் தேதி( 15 நாட்கள்) வரை நடக்கும் என்கிறது படக்குழு.
முதல் பாகத்தின் முடிவில், சேனாபதி இந்தியன் தாத்தா, தான் வெளிநாட்டில் உயிருடன் இருப்பதாக தொலைபேசியில் பேசுவதாக நிறைவடைந்த நிலையில், 2 ம் பாகத்தில் சேனாபதி புதிய கெட்டப்பில் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்குவது மாதிரியும், அப்போது அங்கு நடக்கும் சம்பவங்கள் படமாக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள்.