நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து நடிகர் அஜித்குமார்-இயக்குனர் .வினோத்- தயாரிப்பளார் போனிகபூர் ஆகிய மூவரும் மூன்றாவது முறையாக துணிவு படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர்களுடன் ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.இப்படம்,அடுத்த ஆண்டு 2023 பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, அவ்வப்போது இப்படத்தின் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், துணிவு படத்தின் முதல் சிங்கிள் வெளியாவது குறித்து அதிகாரபூர்வ அப்டேட் வெளியாகி உள்ளது. ஜிப்ரான் இசையில் உருவாகி உள்ள ‘சில்லா சில்லா’ பாடல், வரும் டிசம்பர் 9 ஆம் தேதியன்று வெளியாகும் என புதிய போஸ்டர் ஒன்றுடன் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.