பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கிய மோகன்.ஜி , தனது அடுத்த படைப்பாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் “பகாசூரன்” படத்தை இயக்கியுள்ளார்
இதில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க,. கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி, ராதாரவி, கே .ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை தமது சமூக வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் மோகன்.ஜி, “வெளிவராத பல நிகழ்கால உண்மை சம்பவங்களை வெளியே கொண்டு வரும் முயற்சி” என்றும் குறிப்பிட்டுள்ளார்.