திறமை இருந்தால் கிளாப் போர்டு தட்டுகிறவர் கூட சினிமாவில் நடிகராக வளர முடியும். எத்தனையோ டான்ஸ் மாஸ்டர்கள் அப்படி ஆகியிருக்கிறார்கள்.
தற்போது அரிதாரம் பூசியிருப்பவர் ஆர்ட் டைரக்டர் வீர சமர்.காதல் படம் தொடங்கி இதுவரை 30 படங்களுக்கு மேலாக பணியாற்றியவர் ,வெயில் ,பூ ‘வெயில்’, ‘பூ’, ‘முத்துக்கு முத்தாக’, ‘பாண்டி’, ‘கொம்பன்’ போன்ற படங்களில் நடிகராகவும் முகம் காட்டியவர்.அமலாபால் முதலில் அறிமுகமான ‘வீரசேகரன்’ படத்தில் கதாநாயகனாக நடித்த அனுபவமும் இவருக்கு உண்டு.
இவர் பிறந்தது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் அய்யனார்குளம் கல் கொண்டம்பட்டி கிராமம்.அப்பா கிட்டப்பா, அம்மா பாலம்மாள். ஒரு தீவிரமான ரஜினி ரசிகர் .
சென்னை ஓவியக் கல்லூரியில் பட்டப்படிப்பு . குறிப்பாக சிற்பக் கலையில் மிகுந்த ஆர்வம் ஓவியக்கல்லூரியில் படித்த போதே கலை இயக்குநர் சாபுசரிலின் அறிமுகம் கிடைத்தது.படித்து முடித்ததும் அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார்..
இவர் நடிகர் ஆனது எப்படி?
முதலில் ‘காதல் ‘படத்தில் நடிக்க வைத்தார் இயக்குநர் பாலாஜி சக்திவேல் . ‘வெயில்’, ‘பூ’ , ‘பாண்டி’, ‘வீரசேகரன்’, ‘முத்துக்கு முத்தாக’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கிடாயின் கருணை மனு’
‘கொம்பன்’ , ‘கடைக்குட்டி சிங்கம்’ என்று தொடர்ந்து ‘DSP’ வரை பல பட வாய்ப்புகளில் நடித்திருக்கிறார்.
இப்போது பணியாற்றும் படங்கள் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’,’காடுவெட்டி’ சேரனின்’ ஜர்னி’ என்கிற இணையத் தொடரிலும் நடித்திருக்கிறார்.
காதல் படத்தில்ஒரு மெக்கானிக் ஷெட். அதில் தான் ஹீரோ பரத் இருப்பார். இவரை ஒருநாள் ஷங்கர் அழைத்துப் பாராட்டி,25 ஆயிரம் கவரும் கொடுத்தார்.
‘கடைக்குட்டி சிங்கம்’ படம் வெளியான பிறகு சூர்யா , ஒரு கவரைக் கொடுத்தார். அதில் மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி இருந்தது .அதேபோல் 2டி தயாரிப்பாளர் ராஜா எங்கள் வீட்டிற்கு, தட்டு நிறைய பழங்கள் கொடுத்து அனுப்பினார். அது ஒரு வெள்ளித்தட்டாக இருந்தது ..