
கபாலி, பரியேறும் பெருமாள், கஜினிகாந்த், , டானாக்காரன், மற்றும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘காலேஜ் ரோடு’ .
கல்வி நிலையங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினையை பற்றி பேசுகிறபடமாக இருக்கும். இளைஞர்களின் வாழ்வில் கல்வியின் அவசியமும் , அந்த கல்வி இன்று என்னவாக இருக்கிறது , அது அனைவருக்குமானதாக இருக்கிறதா? எதிர்கால சந்ததியினருக்கு கல்வி என்னவாக இருக்கப்போகிறது என்பதைபற்றி பேசுகிறபடம் .
பரபரப்பான திருப்பங்களோடு காதல் நட்பு நகைச்சுவை கலந்த கமர்சியலான படமாகவும் இருக்கும் கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து திரைப்படத்தை எடுத்துள்ளோம் என்கிறார் இந்த படத்தின் இயக்குனர் ஜெய் அமர்சிங்.
இந்த படத்தை பார்த்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் இயக்குனர் பா.இரஞ்சித்.