
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு முக்கியம் “. இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில்வரலாறு முக்கியம், வெளியாகிறது.
படத்தின் ஹீரோ நடிகர் ஜீவா பேசுகையில் “எஸ்.எம்.எஸ். படத்திற்கு பிறகு அது போன்று ஒரு படம் வேண்டும் என்று அனைவரும் என்னை கேட்டார்கள். அப்படி ஒரு படமாய் தான் இந்த வரலாறு முக்கியம் வந்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர் மிகவும் அதிகமான காமெடி உணர்வு உள்ளவர். அது படத்திலும் பிரதிபலித்துள்ளது. கோவிட் காலகட்டத்தில் தான் இந்த படத்தை உருவாக்கினோம். மக்கள் சந்தோஷமாக படம் பார்க்க வேண்டுமென இப்படத்தை உருவாக்கியுள்ளோம். ஹீரோயின் பிரக்யா மற்றும் காஷ்மீரா இருவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியை தருகிறது. காஷ்மீரா இதில் மலையாளம் கலந்த தமிழ் பேசி அசத்தியுள்ளார். பிரக்யாவை முன்னதாகவே சோஷியல் மீடியா மூலம் தெரியும். அவருடன் பகிர்ந்துகொண்டதும், படபிடிப்பு தளத்திலும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அனைவரது கூட்டு முயற்சியிலும் இந்த படம் உருவாகி உள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.”என்று கூறினார்.
பிரக்யா நாக்ரா, விடிவி கணேஷ்,கே.எஸ்..ரவிக்குமார்,மற்றும் பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.




