
கத்தி படத்தை தொடர்ந்து பிறகு ஏ.ஆர்.முருகதாஸ்,’ மௌனகுரு ‘படத்தின் இந்தி ரீமேக்கை சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் இயக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளியானது..ஆனால் தற்போது இ ந்தி படத்தை கைவிட்டு, தமிழில் ஏ.ஆர். முருகதாஸ் விக்ரமை வைத்து ஒரு புதிய படம் இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..இப்படம் குறித்து, ஏ.ஆர். முருகதாஸ், விக்ரமிடம் பேசிவிட்டதாகவும், கணிசமாக கால்ஷீட் தேதிகளை வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது விக்ரம் நடித்துக்கொண்டிருக்கும் 10 எண்றதுக்குள்ள படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.ஆனால் புதிய படம் குறித்து முருகதாஸ் வட்டாரம் எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டது.