ருத்ரய்யாவின் இயக்கத்தில் 1978ல் வெளியான ‘அவள் அப்படித்தான் ‘ படம் பெண்ணின் சுய உரிமையைப் பற்றிப் பேசிய படமாகக் கவனிக்கப்பட்டது.படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சகர்களால் பேசப்படும் படமாகவும் குறிப்பிடத்தக்க படமாகவும் இன்றளவும் பேசப்படுகிறது.
அந்தப் படத்தின் நீட்சியாக இப்பொழுது அதே சிந்தனையின் இன்னொரு வடிவமாக ‘ அவள் அப்படித்தான்2’ திரைப்படம் உருவாகி உள்ளது. முந்தைய ‘அவள் அப்படித்தான்’ படத்தின் நாயகியின் பெயர் மஞ்சு. இதிலும் நாயகியின் பெயர் மஞ்சுதான்.இந்தப் படத்தை ரா .மு. சிதம்பரம் இயக்கியுள்ளார்.

இந்த ‘அவள் அப்படித்தான் 2 ‘ படத்தில் அந்த ‘அவளாக ‘ சுயமரியாதை கொண்ட ஒரு பெண்ணாக அதாவது கதை நாயகியாக நடித்திருப்பவர் சினேகா பார்த்திபராஜா. திருப்பத்தூரைச் சேர்ந்த இவர் ஒரு வழக்கறிஞர்.இந்தியாவில் முதன்முதலாக மதம் ,ஜாதியற்றவர் என்று தனக்கு ஜாதிமறுப்புச் சான்றிதழ் வாங்கியவர். இதற்காகப் பல ஆண்டுகள் போராடி அதைப் பெற்றவர்.இவரது கணவர் பார்த்திபராஜா நாடகக் குழுவைத்துள்ளார் .கணவர் குழுவில் இணைந்து நடித்த அனுபவம் சினேகாவுக்கு உண்டு.
படத்தின் நாயகனாக நடித்துள்ளவர் அபுதாகிர்.இவர்கள் தவிர சுமித்ரா, அனிதாஸ்ரீ, சுதாகர், வெங்கட்ரமணன் ,தனபால், தொல்காப்பியன் மற்றும் பலர் நடித்துள்ளனர்..
இந்தப் படம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி உள்ளது.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு- வேதா செல்வம், இசை- அரவிந்த் சித்தார்த், எடிட்டிங்- அஹமது ,கலை டி. பாலசுப்பிரமணியன்.