இப்படி நடந்தாலும் ஆச்சரியமில்லை என்று திரையுலகில் பலர் நினைத்தார்கள்.
அதாவது அடாவடி வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படு தோல்வியை சந்தித்ததால் லைகாவின் சந்திரமுகி 2 -ல் இருக்கமாட்டார் என்று நம்பினார்கள் .அது நிஜமாகிவிடும் போலிருக்கிறது. நாய் படத்தில் தனக்கொரு பாடல் காட்சி வைக்க வேண்டும் என்று அடம் பிடித்த வடிவேலு ,அதற்காக சந்திரமுகி பட ஷூட்டிங்கை தவிர்த்திருக்கிறார். இயக்குநர் பி.வாசுவையும் டபாய்த்திருக்கிறார். இதனால் வடிவேலுவின் காட்சி படமாக்கப்படவில்லை.
சந்திரமுகி முதல்பாகத்தில் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைக்காட்சிகள் நல்ல வரவேற்பு பெற்றிருந்ததால் இரண்டாம் பாகத்திலும் வடிவேலு இருந்தால் நல்லது என்பதாக படக்குழு நினைத்திருந்தது. அதனால் அடாவடி வடிவேலுவை ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.ஆனால் அவர் போதிய அளவில் ஒத்துழைப்புத் தராததால் தூக்கிவிடலாம் என்பதாக நிர்வாகம் முடிவுக்கு வந்து அது நிறைவேற்றப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
இந்தத் தகவல் லைகா நிறுவனர் சுபாஸ்கரனுக்கும் சொல்லப்பட அவரும், ஒத்துவந்தால் பாருங்கள் இல்லையெனில் உங்கள் வசதிப்படி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.
இப்போது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் ஓடவில்லை என்பதோடு அதில் நடித்த ஆனந்தராஜுக்குக் கிடைத்த வரவேற்பு கூட வடிவேலுவுக்குக் கிடைக்கவில்லை.
வடிவேலு படக்குழுவை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியிருப்பதாக சொல்கிறார்கள். வைகைப்புயலின் சமாதானம் எடுபடுமா?
எனக்காடா எண்டு கார்டு போடுறீங்க ,?