72 வது வயது தொடங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் என திருப்பதிக்கு பக்தி விசிட் அடித்திருக்கிறார். மக்கள் ஐஸ்வர்யாவுடன் திருப்பதிக்கு வந்த அவர்கள் ஒரு நாள் இரவு தங்கி மறுநாள் அதிகாலை சுப்ரபாத சேவையை பார்த்து மகிழ்ந்தனர்.
பின்னர் ரங்கநாயகி மண்டபத்தில் வேத பாராயணம் மற்றும் தெய்வீக சடங்குகளில் கலந்து கொண்டனர்.
ரஜினிக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் ‘பெத்த தர்கா ‘சென்று வழிபட்டனர்.கடப்பாவில் அமீன் பீர் தர்கா என அழைக்கப்படுகிறது பெத்த தர்கா .
தற்போது ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.2023 -ல் இப்படம் ரிலீஸ் ஆகிறது.அடுத்து ஐஸ்வர்யா இயக்கம் லால் ஸலாம் படத்தில் சின்ன வேடத்தில் நடிக்கிறார். அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிபி சக்கரவர்த்தி என்கிற படத்தில் நடிக்கப்போவதாக சொல்கிறார்கள்.