இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘நந்தன்’.
சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கிறார் , ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலாஜி சக்திவேல் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த படத்தில் அரசு அதிகாரியாக நடிப்பதற்கு இன்றைய அமைச்சர் உதய நிதி ஸ்டாலினிடம் கேட்டிருந்தார்கள்.அவர் நடிக்க இயலாது என்று சொல்லிவிட்டதால் தற்போது காவல்துறை அதிகாரி பொறுப்பு சமுத்திரக்கனியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.