“தமிழ்நாட்டில் நம்பர் ஒன் நடிகர் விஜய்தான் “என்று குண்டு போட்ட தயாரிப்பாளர் தில் ராஜு தற்போது மற்றொரு அதிர்வேட்டு போட்டிருக்கிறார்.
“வாரிசு படக்கதை விஜய்க்காக எழுதப்பட்டதல்ல.!”என்கிறார் வாரிசு படத் தயாரிப்பாளர்.
சும்மாவே மீம்ஸ்களை பறக்கவிடுவதில் தமிழக ரசிகர்கள் சூறாவளியாக இருப்பார்கள். இதை கேட்ட பிறகு சும்மாவா இருக்கப்போகிறார்கள்.?
“தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவை மனதில் வைத்துக்கொண்டு எழுதப்பட்டது. ஆனால் அவரது கால்ஷீட் கிடைப்பது சிரமமாக இருந்தது. இதனால் அல்லு அர்ஜுன் ,ராம் சரண், பிரபாஸ் ஆகியோரிடம் கதை சொல்லப்பட்டது. ஆனால் அவர்கள் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை.
கடைசியாக தமிழ் ஹீரோ விஜய்யிடம் சொல்லி ஓகே வாங்கியிருக்கிறோம்”என்பதாக தில் ராஜு சொன்னார் என்று ஆந்திர ஊடகங்கள் எழுதியிருக்கின்றன .ஆக ஐந்து தெலுங்கு ஹீரோக்கள் ரிஜெக்ட் பண்ணிய கதையில் தளபதி விஜய் நடித்திருக்கிறார்.
ஓ மை கடவுளே!