சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இன்னும் பெயரிடப்படாத ( ’சூர்யா 42’ )படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
இரண்டு பாகங்களாக உருவாகி வருவதாக கூறப்படும் இப்படத்தில் நடிகர் சூர்யா நான்கு வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார்.
இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.
இப்படத்தின் சண்டை இயக்குனராக பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தின் சண்டைக்காட்சிகள் தற்போது சென்னை அருகே படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதில் படக்குழுவினர் தடுத்தும், பல காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்து சூர்யா ‘டூப்’ போடாமல் நடித்து வருகிறார் என்கிறார்கள்