பிரான்ஸ் அரசு நேற்று நடிகர்கமல்ஹாசனுக்கு செவாலியே விருது வழங்கி கெளரவித்த நிலையில், ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகுமார் , சூர்யா , கார்த்தி மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று செவாலியர் விருது பெற்றுள்ள உலகநாயகன் திரு.கமல் ஹாசன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன் அவரிடம் உடல் நலம் பற்றியும் விசாரித்தனர்.
செவாலியே திரு.கமல் ஹாசனுடன் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி ,பொது செயலாளர் விஷால், செயற்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார் , நந்தா , ஸ்ரீமன்,A.L.உதயா மற்றும் நியமன குழு உறுப்பினர் ஹேம சந்திரன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.