அட்மன் சிம்பு நடிப்பில், கன்னட இயக்குனர் என் கிருஷ்ணா இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி வரும் புதிய படம், ‘பத்து தல’ .
இப்படம் கன்னடத்தில் வெளியான ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.இதில் ‘கேங்ஸ்டர்’ ஏஜிஆராக சிலம்பரசன் நடிக்கிறார். கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது, இப் படத்தை இம்மாதம் வெளியிட முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், தனிப்பட்ட சில காரணங்களால் படத்தின் வெளியீட்டை தயாரிப்பாளர்கள் ஒத்திவைத்ததாக தகவல்கள் வெளியாகின.
தற்போது, சிலம்பரசனின் ‘பத்து தல ‘ அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கடைசியில் வெளியாகும் என சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.இதற்கிடையில்,
இயக்குனர் கோகுலுடன் சிலம்பரசன் இணையும் ‘கொரோனா குமார்’ படம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில்,அப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.