சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கோபம் கொள்ளும் அளவுக்கு அந்த இயக்குநர் என்ன செய்தார் என்பது தெரியவில்லை!
இண்டஸ்ட்ரியில் உள்ளவர்கள் திகைத்துப்போய் இருக்கிறார்கள்.
ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அடுத்து லைகாவின் லால் ஸலாம் படத்தில் சிறிய வேடத்தில் நடிக்கப்போகிறார். மகள் ஐஸ்வர்யா இயக்குவதால் அந்த படத்தின் கமர்சியல் வால்யூவுக்காக ரஜினி இணைக்கப்படுகிறார் என்றே சொல்லலாம்.
இவைகளுக்கு மத்தியில் இன்னொரு தகவல் ஓடிக்கொண்டு இருக்கிறது.
லைகாவின் தயாரிப்பில் மற்றொரு படத்தில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். டான் படத்தை இயக்கிய சிபிச்சக்ரவர்த்தி இயக்கப்போவதாக சொல்லப்பட்டது.இதற்காக இவருக்கு டிஸ்கஷனுக்காக தனியாக ஒரு அலுவலகம் போட்டுக்கொடுத்தார்களாம்.
இதில் வேடிக்கை என்னவென்றால் தற்போது அந்தப்படம் இல்லை என்கிறார்கள். காரணம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியாம்.!
அப்படி என்னதான் நடந்ததாம்?
சிபி சொன்ன கதையின் கருத்து ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போனதால்தான் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்,
இதன் பிறகு திரைக்கதையை உருவாக்க இயக்குநர் ரவி சக்கரவர்த்தி ,கண்ணன் ஆகியோருடன் இணைந்து வடிவம் கொடுத்திருக்கிறார்.
அங்கேதான் ஆண்டவன் வெடிகுண்டை வெடித்திருக்கிறான்!
தலைவருக்கு அந்த கதை பிடிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக சிபி சக்கரவர்த்தியின் அணுகு முறையும் நடத்தையும் ரஜினிக்கு மிகவும் கோபப்படுத்தி விட்டதாக சொல்லுகிறார்கள்.
லைகா நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அவரின் ” இயக்கத்தில் படம் நடிக்க முடியாது, இனிமேல் அவர் என் முகத்திலேயே விழிக்கக்கூடாது, உங்களுக்கு வேண்டுமானால் அவரை வைத்து படம் எடுத்துக் கொள்ளுங்கள் “என்று மிகக் கடுமையாகச் சொல்லிவிட்டாராம்.
அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டது லைகா .!
இது மட்டுமல்ல 6 கோடி சம்பளம் கேட்டிருந்த சிபி 12 கோடியாக உயர்த்திக்கேட்டது கோபப்படுத்திவிட்டதாம்.
ரஜினி நடிப்பதற்கு மறுத்து விட்டார். சிபியும் சம்பளத்தை இரட்டிப்பாக்கிவிட்டார். ஆக இனியும் அந்த படம் வேணுமா என்ன? யோசனையில் லைகா என்கிறார்கள்.