“உடன்பால் “என்கிற இந்தப் படத்தைப்பார்ப்பதற்கு முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்படட படம் ‘தி டெத் ‘
“இன்னைக்கு செத்தா நாளைக்குப் பால்”என்பதை யதார்த்தமாக தொடர்புடைய பி.ஆர்.ஓ.க்கள் உணர்த்திவிட்டார்கள். சரி படம் எப்படி?
டெத் என்கிற படம் அவ்வளவாக மனதில் பதியவில்லை.
உடன்பால் சிரிப்பு வெடிகளை அங்கங்கே கொளுத்திப்போட்டது. இது ஆஹா இணையதளத்தில் வெளியாகிறது.
அப்பனின் சாவை காசாக்கமுடியுமா என்று மகன் மகள் மருமகன் உள்ளிட்ட உறவுகள் திட்டமிடும் அளவுக்கு நடுத்தர மக்களின் வாழ்க்கை நன்றி கேட்டு போயிருக்கிறது என்பதை வெகு இயல்பாக சொல்லியிருக்கிறார்கள்.
கேசட் விற்ற வருவாயில் சின்னதாக ஒரு சொந்த வீடு வைத்திருக்கிறார் சார்லி.
கேசட்டிலிருந்து செல்போனில் ‘எல்லாமே’பார்க்கிற வசதி இருப்பதால் கேசட் தொழில் நசிந்து விட்டது.மகன் லிங்கா நொடித்துப்போகிறார் .வீட்டை விற்று கடனை அடைத்து விட்டு வேறு தொழில் பார்க்கலாம் என நினைக்கிறார். அப்பாவோ அதற்கு இணங்கவில்லை.
என்ன நடந்தது?
நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக்சீனிவாசன்.
நடுத்தர வர்க்க இயலாமை, கோபம், பாசம் ஆகியனவற்றைச் சரியாக வெளிப்படுத்துகிறார் லிங்கா.!இவரின் மனைவியாக நடித்திருக்கிற அபர்ணதியின் நடிப்பு அருமை.சார்லி சிறந்த குணசித்திர நடிகர் என்பதை உணர்த்தியிருக்கிறார்.
அண்ணன் லிங்காவுக்கு சற்றும் குறையாமல் தங்கை காயத்ரி. இவரைப்போல் அதிக அளவில் பெண்கள் இருக்கவே செய்கிறார்கள். . நிலா அப்பா என்று கணவனை அழைக்கும் பாங்குக்கே அவருடைய சம்பளம் சரியாகிவிட்டது.
காயத்ரியின் கணவராக வரும் விவேக்பிரசன்னா அதகளம் செய்கிறார். இயல்பான கேரக்டர்.
சார்லியின் இரண்டாவது மகனாக வரும் தீனா,ஒரு காட்சியில் மட்டும் வரும் மயில்சாமி அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.
டிசம்பர் 30 முதல் ஆஹா இணையதளத்தில் இப்படத்தைப் பார்க்கலாம்.