கடந்த ஆண்டின் இறுதியில் வெளியான நல்ல படங்களில் ‘டிரைவர் ஜமுனா’நினைவில் நிற்கிற படமாகும்.
ஐஸ்வர்யா ராஜேஷை முன்னிலைப்படுத்தி அமைந்துள்ள கதை.
வாடகை கார் டிரைவரான அப்பா திடீரென இறந்துவிடுகிறார். அம்மாவுக்கு பக்கவாதம் . தம்பிக்கு வெளியூரில் வேலை. . குடும்பத்தை சுமப்பதற்காக அப்பா ஓட்டிய காருக்கு ஐஸ்வர்யா டிரைவராகிறார். இதன் பின்னர்தான் இன்னல்களையும் சேர்த்து சுமக்க வேண்டியதாகிறது..கூலிப்படையினர் காரில் ஏறுகிறார்கள் .போலீஸ் துரத்துகிறது. தப்பிப்பதற்காக ஐஸ்வர்யாவை பணயக்கைதியாக வைத்துக்கொள்ள அதன் பின்னர் என்னவெல்லாம் நிகழ்கிறது என்பதை விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார்கள்..
ஐஸ்வர்யா ராஜேசுக்கு கனமான கேரக்டர். அம்மாவை கவனிப்பது,காரைக்கழுவி தயார் செய்வது ,அத்தையை சமாளிப்பது என தொடக்க காட்சிகளில் மனதுக்குள் உட்கார்ந்து கொள்ளும் ஐஸ்வர்யா காரில் நடக்கிற பதட்டமான நிலையை கடப்பது திறமையான நடிப்புக்கு உதாரணமாக இருக்கிறது.
அரசியல்வாதிகளாக வரும் ஆடுகளம் நரேன்,மணிகண்டன் , கவிதாபாரதி,ஆகியோர் சரியான தேர்வு. , அபிஷேக், ஸ்ரீரஞ்சனி, பாண்டியன் ஆகியோர் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
கோகுல்பினாயின் ஒளிப்பதிவில் கதையின் ஓட்டத்துக்கு உதவியாக இருக்கிறது. பதட்டமான காட்சிகளில் அவருடைய கேமரா கோணங்கள் நம்மை படபடக்க வைக்கிறது.
ஜிப்ரானின் பின்னணி இசை,சோடை போனதில்லை.சுகம் இதம்.
வலிமையான கதை, மன உறுதியுடன் போராடும் தன்மை பெண்களுக்கு வேண்டும் என்கிற கருத்தினை வலியுறுத்தி இயக்குநர் கிங்ஸ்லின் படைத்திருக்கிற கதை பாராட்டு பெறும் .
பிற் பாதியில் வருகிற திருப்பங்கள் ,மற்றும் ரகசியங்கள் கதையை தாங்கிப் பிடிக்கின்றன.ஐஸ்வர்யா ராஜேசுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையம் சொல்லி விடலாம்.