வேலைக்கு மேல் வேலை….இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தால் ஒத்தை ஆளு என்ன செய்ய முடியும்?
அதுக்குத்தான் அசிஸ்டெண்டுகள்னு பத்து, பன்னெண்டு பேர் இருக்காங்களே,வெச்சு செஞ்சிறவேண்டியதுதான் .
அதைத்தான் இப்ப இயக்குனர் ஷங்கர் செய்றார்னு இண்டஸ்ட்ரியில் பேச்சு.!
கமல் நடிக்கும் இந்தியன் 2, ராம்சரண் நடிக்கும் படம்னு இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கிவருகிறார் ஷங்கர்.இந்தியனுக்கு பத்து நாள்,ராம்சரனுக்கு பத்து நாள்னு பங்கு போட்டு வேலைகள் நடக்குது.
இப்ப என்ன பிரச்னைன்னா ….?
இந்தியன் 2 படப்பிடிப்பை இயக்குநர் அறிவழகன் நடத்திக் கொண்டிருக்கிறார்னு சொல்றாங்க. அதாவது உலகநாயகன் டேட்ஸ் இல்லாத நேரங்களில்.!
ராம்சரண் படத்தில் பாடல்காட்சி படமாவதால் அதை நடன இயக்குநர் நடத்திக் கொண்டிருக்கிறாராம்.
இப்படியெல்லாம் ஷங்கர் செய்ய மாட்டெரே என்றால் என்ன செய்வது சூழ்நிலை அப்படி!
வேள்பாரி படத்துக்காக கதாசிரியர் வெங்கடேசன் எம்.பி.யுடன் திரைக்கதை விவாதம் நடக்கிறதாம்.பாராளுமன்ற வேலைகளை விட்டு விட்டு சினிமாவில் கவனம் செலுத்தினால் மார்க்சிய கம்யூனிஸ்ட் கடசி மேலிடம் சும்மா இருக்காது.அதனால் நேரம் கிடைக்கிறபோது காரியத்தை கப்புன்னு முடிச்சிக்க வேண்டியதுதான்.!
நீங்க நடத்துங்க பாஸ்.!