மிகப் பெரிய கோடீஸ்வரர் சரத்குமார் ,அரண்மனை மாதிரி வீடு. அழகான மனைவி ஜெயசுதா .மூத்தவர் ஸ்ரீ காந்த்,இளையவர் ஷாம்,,கடைசி பிள்ளை விஜய். விவரமான வேலையாள் யோகிபாபு.குடும்படாக்டர் பிரபு.
சுரங்க அதிபதி சரத்குமார் என்றால் போட்டியாளர்கள் இல்லாமலா ?பிரகாஷ் ராஜ் நேர்ந்து விடப்பட்டிருக்கிறார்.!
ம்ம்ம்ம் ..கதை ஜெமினி கணேசன் காலத்தது. ! மாளிகையில் போட்டோ மாட்டி பூமாலை எல்லாம் போட்ருக்கே!அதனால் பழைய படங்களை பார்த்த உணர்வு அங்கங்கே வருது.ரேஷன் கடை அரிசியில் செய்த இட்டலி என்றாலும் வெள்ளிப் பாத்திரத்தில் அவித்திருக்கிறார்கள். கிராண்டியர் காட்சிகளில் அழகு கொள்ளை கொள்கிறது.படத்தின் மைனஸ்களை மறைத்து விடுகிற மாஜிக்தான் ஆர்ட் டைரக்சன் ,ஒளிப்பதிவு.
அப்பாவின் கொள்கைகளுக்கு மாறுபட்ட விஜய் தனியே பிரிந்து சென்று அவரும் கோடீஸ்வரர் ஆகிறார்.அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மாளிகைக்கு வருகிறார்.
இதன் பின்னர்தான் பிள்ளைகளின் தவறுகள் சதிகள் தெரிய வர அதை எப்படி கலைகிறார் விஜய் என்பதே ஹைதர் காலத்து கதை.பார்த்தஞாபகம் இல்லையோ என்கிற மாதிரி பல படங்களின் நினைவுகள் நெஞ்சத்தில் நிழலாடினாலும் விஜய்,மற்றும் சரத்குமார் ஆகியோரின் நடிப்பும் ,திரைக்கதையமைப்பும் போரடிக்காமல் காப்பாற்றுகிறது.
அப்பா அம்மா தொடர்பான வசனங்கள் எஸ்.ஏ.சி,ஷோபா சந்திரசேகரை நினைத்து எழுதப்பட்டது போலும்.ரொம்ப உருக்கமாக இருக்கிறது.
விஜய்யின் பக்கா மாஸ் படம் என்பதால் அதற்கேற்ப காட்சிகள் இருக்கின்றன.டான்ஸ் ,ஃ பைட் என அதகளம் நடக்கிறது. என்னை நடனத்தில் தோற்கடிக்க முடியுமா என்கிற அளவுக்கு இருக்கிறது.பைட்டும் அதே ரகம்.
சரத்குமாருக்கு நல்ல ரோல் மகன்களினால் அவர் பாதிக்கப்படுகிறபோது எக்ஸலண்ட். உயிர்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை டாக்டர் பிரபு சொன்னதும் சரத்தின் நடிப்பு வேற ரேஞ்ச் ! மனைவியாக ஈடு கொடுத்திருக்கிறார் ஜெயசுதா.
பிரகாஷ் ராஜ் கவுரவ வில்லன் மாதிரி.! அப்படித்தான் இருக்கிறது இவருக்கான காட் சிகளும்.. யோகிபாபு சில காட்சிகளே வந்தாலும் நச்சென மனசில் அமர்கிறார். சூப்பரப்பே!
நாயகியாக ராஷ்மிகா மந்தனா .ஆட்டம் போட விஜய்க்கு பக்கத்தில் இருக்கிறார். அழகும் அவ்வளவாக இல்லை. ரஞ்சிதமே பாட்டு மட்டும் இவரை மெருகேற்றிக் காட்டுகிறது.ஜவுளிக்கடை பொம்மை.!முகத்தில் நடிப்பு ரேகையை காணோமே அம்மா!
இடைவேளைக்கு பிறகு எஸ்.ஜெ.சூர்யா என்ட்ரி. கெஸ்ட் ரோல் போல.!
தமனின் இசையில் இரண்டு பாடல்கள் இனிமை.ரஞ்சிதமே பாடலுக்கு ஆடத் தோன்றுகிறது.விஜய்யுடன் ரசிகர்களும் சேர்ந்து ஆடுகிறார்கள்.
காட்சிகளின் பிரமாண்டம் தமிழ் தெலுங்கு ரசிகர்களின் கமர்சியல் டேஸ்ட் ,இவைகளின் துணையுடன் இயக்குனர் பைடி பள்ளி விளையாடி இருக்கிறார்.
மாஸ் பக்கா கமர்சியல் படம்.!