“ஏனிந்த வெறுப்பு, வேணாம் சார் ! வளர்ந்து வரவங்க ” என்றாலும் ரஜினிகாந்த் கேட்பதாக இல்லையாம்.!
அந்த அளவுக்கு அவர் நோகடிக்கப்பட்டதாக தெரிகிறது.
என்ன மேட்டர்?
ஜெயிலர் படப்பிடிப்பு தற்போது ராமோஜி ராவ் நகரில் நடக்கிறது. இயக்குநர் நெல்சன் என்பது தெரிந்த விஷயம்தான்.! அடுத்து அவர் காமியோ ரோலில் நடிக்க விருப்பது மகள் ஐஸ்வர்யாவின் லால் சலாம் படத்தில்.! “செவ்வணக்கம் “என்பது பொருள், லைகா தயாரிப்பது.
இதை முடித்துவிட்டு அடுத்தபடம் யாருக்கு?
அங்கேதான் ரஜினி முரண்படுகிறார் என்கிறார்கள்
“நெல்சன் வேணாம்!”
“சரி அடுத்து ?”
சிபி சக்கரவர்த்தியும் வேணாம்.இந்த இளம் இயக்குநர்களே வேணாம்பா! என்னோடு அனுசரிச்சு போகிற டைரக்டர்ஸ் மட்டும் வந்தா போதும்” என்கிறாராம்.
ஏனப்பா இவ்வளவு வெறுப்பு?
ரஜினியின் மனம் நோகிற அளவுக்கு அவர்கள் நடந்து கொள்வதாக சொல்லுகிறார்கள்.
அதனால் பி வாசுவிடம் பேசியிருக்கிறார்கள். அவரும் கதையின் மைய்ய கருத்தை சொல்லி சம்மதம் வாங்கி ,ஒரு குழு முழுக்கதையை தயாரிக்கிறது.
ரெடியானதும் ரஜினியின் சம்மதம் வாங்கி படம் எடுப்பார்கள் என்கிறது கோலிவுட் டாப் வட்டாரம்.!!!
ஜெ ஜெ ராம்.!