தமிழர் புத்தாண்டின் முதல் செய்தியாக ஒரு தமிழன் ஏமாற்றப்பட்டதுதான் முன்னதாக வந்து நிற்கிறது.
அதுவும் ஒரு தமிழ் நடிகர் விஜயசேதுபதி.
இயக்குநர்கள் ராஜ் ,டிகே ஆகிய இருவரும் ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
இவர்கள் உருவாக்கியுள்ள புதிய இந்தி இணையத்தொடர் ஃபார்ஸி. இந்தத் தொடர் ஷாஹித் கபூர் ,விஜய் சேதுபதி ஆகியோருக்கு டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ளது.
கே.கே.மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடர்தான் ‘ஃபார்ஸி’,
இத்தொடர் தமிழிலும் குரல்மாற்று செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது. இதன் முன்னோட்டம் நேற்று வெளியானது.
இந்திப்பதிப்பில் விஜய்சேதுபதி இந்தியில் பேசியிருக்கிறார்.
தமிழ்ப்பதிப்பில் அவர் பேசவில்லை.ஏனாம்?
ஒரு படைப்பு இன்னொரு மொழியிலும் வெளியிடும்போது அதற்குத் தனியாகச் சம்பளம் தருவார்கள்.
ஆனால் அதற்குத் தனியாகச் சம்பளம் கொடுக்கவில்லை.!ஏமாற்றிவிட்டார் என்கிறார்கள்.
என்னடா இது, தமிழுக்கு வந்த சோதனை,!