மலேசியாவிலிருந்து தற்போது நமக்கு ஒரு அவசர செய்தி கிடைத்திருக்கிறது.பிச்சைக்காரன் 2 படப்பிடிப்புக்காக மலேசிய சென்றிருந்தார் நடிகர் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி .அங்கு கதாநாயகியுடன் விரைவாக செல்லும் எந்திரப்படகில் கடலில் விரைந்து செல்லும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது..அப்போது அந்த படகு நிலை குலைந்து கடலில் கவிழ்ந்ததால் படகில் இருந்த விஜய ஆண்டனி கடலில் விழுந்து மூழ்கி விட்டார் .கதாநாயகி காப்பாற்றப்படுள்ளார். ஆனால் விஜய ஆண்டனி பயத்தில் கடலில் மூழ்கி அதிக அளவில் கடல் தண்ணீரை குடித்து மயக்கமானர் .அவரை உடனடியாக மருத்துவ மனையில் சேர்த்து விட்டார்கள் தீவிர அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தில்லை என்கிற செய்தி ஆறுதலாக இருக்கிறது.