ஒரு பக்கம் “இவர்தான் சூப்பர்ஸ்டார் “என்று விஜய்யை சரத்குமார் கை காட்ட ,இன்னொரு பக்கம் “டேய் ,எங்காளுதான் டா ரியல் சூப்பர் ஸ்டார் “என்று ரஜினி ரசிகர்கள் ஓங்கி அடிக்க ,இன்னும் சண்டை ஓயல.
ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி அமைதியாக படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னைக்கு வந்துவிட்டார்.
ரஜினிகாந்த் , தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். மோகன் லால், ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
.இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த 7 ஆம் தேதி ஐதராபாத் புறப்பட்ட ரஜினி படப்பிடிப்பில் இருந்து பொங்கலன்று காலை சென்னை திரும்பிவிட்டார் .ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் மோகன்லாலுக்கும் அவருக்குமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தபடியே காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.