வர வர அரசியலில் இருக்கிற அளவுகூட சினிமாவில் சிரிப்புக்கு இடமில்லாமல் போய் விட்டது.காரணம் சினிமாவில் ஜோக்கர் குறைந்து விட்டார்கள் .காமடி என்கிற பெயரில் குரங்கு சேட்டை செய்வது அதிகமாகி விட்டது. சந்தானம் ,யோகி பாபு இந்த இருவர்தான் சற்று புண்ணியம் ம்கட்டிக்கொள்கிறார்கள்..சந்தானம் ஹீரோ என்று பந்தா காட்டிக்கொண்டு போய் விட்டார்.
அவர்தான் தற்போது காமடி ‘கிக்’ பட மேக்கிங் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
சந்தானம், நாயகி தன்யா ஹோப், செந்தில், கோவைசரளா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான பிரமானந்தம்,மன்சூர் அலிகான், ஒய்.ஜி. மகேந்திரன்
சாது கோகிலா உட்பட பெரும் நட்சத்திர பட்டாளம் செய்த நடித்த காமெடி கலாட்டா பெரும் வைரலாகி வருகிறது.
பரபரப்பாக இறுதி கட்ட பணிகளில் இருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
Fortune Films நவீன் ராஜ் தயாரிப்பில் இயக்குநர் பிரசாந்த் ராஜ் தயாரிக்கிறார்.
—