படப்பிடிப்பில் உயிர் இழப்புகள் ..கேட்கும்போதே நெஞ்சு படபடக்கிது.
சத்யராஜின் ‘வெப்பன்’ படப்பிடிப்பில் லைட்மேன் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
நடிகர் வசந்த் ரவியுடன் சத்யராஜ் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘வெப்பன்’. இப்படத்தை குகன் சென்னியப்பன் இயக்கி வருகிறார். . இந்த படத்தில் தன்யா ஹோப் முக்கிய வேடத்தில்,நடிக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த அய்யர் கண்டிகையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான ஏ.ஆர்.ஆர்.பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சென்னை சாலிக்கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் 40 அடி உயரத்தில் மின் விளக்குகளை அமைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குமார் கால் தவறி கீழே விழுந்து உயிர் இழந்து விட்டார்.
பொன்னேரி அரசு மருத்துவ மனையும் இதை உறுதி செய்திருக்கிறது. லைட்மேன் உயிரிழந்த சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.