நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், தலைவர் நாசர் ஆகியோர் மீது நடிகரும் பத்திரிகையாளருமான வாராகி என்பவர் ரூ 3 கோடி ஊழல் குற்றம்சாட்டை கூறியுள்ளார். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தக் குற்றச்சாட்டு குறித்து நடிகர் சங்கம் வாராகிக்கு நோட்டீஸ் அனுப்பி, நேரில் வந்து விளக்கம் தருமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் நேரில் சென்றபோது சங்க நிர்வாகிகள் யாருமில்லாததால் திரும்பிவிட்டாராம்.
இதுகுறித்து வாராகி கூறுகையில், நட்சத்திர கிரிக்கெட் நடத்த ரூ 13 கோடியை சன் டிவி கொடுத்தது. அதில் இப்போது 7 கோடிதான் இருப்பதாகக் கணக்கு காட்டுகிறார்கள் விஷால் தரப்பினர். 3 கோடி கிரிக்கெட் நடத்த செலவாகிவிட்டதாகக் கூறுகிறார்கள். மீதி 3 கோடிக்குக் கணக்கு இல்லை. கேட்டால் மிரட்டுகிறார்கள். இதுவரை சரியான பதில் இல்லை. நான் இதுகுறித்து சட்டப் போராட்டத்தில் இறங்கப் போகிறேன்,” என்கிறார். ஆனால் இது குறித்து திரையுலகில் சிலர் கூறும் போது இந்த நபருக்கு இதே வேலையா போச்சு! சும்மா வெறும் ‘பப்ளிசிட்டி’ ஸ்டன்ட் தாங்க…!என்கிறார்கள்.