` நடிகர்களில் உச்சத்தில் இருக்கிறவர்களுக்கு யார் உதவியாளராக இருந்தாலும் சரி ,அதிலும் அந்த உதவியாளர்கள் ‘விவரமானவர்களாக’ இருந்தால் விண்ணை தொட்டுவிடலாம் என்று கோலிவுட்டில் சொல்லுவார்கள்.அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவர்களாக இருப்பார்களாம் .அது உண்மைதான் என்பதை நடிகர் விஜய்யின் மானேஜர் ஜெகதீஷ் மெய்ப்பித்திருக்கிறார்.
இவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணம் தொழில் அர்ப்பணிப்பே.!
இவர் சொன்னால் எல்லா நடிகைகளுமே கேட்கிறார்கள் .இதை பயன்படுத்திக்கொண்டு இன்று அவர் தயாரிப்பாளராக உயர்ந்திருக்கிறார்.தி ரூட் என்கிற தயாரிப்பு நிறுவனம் இவருடையதே ! ரூட்.அதாவது ஆணி வேராக இருப்பது விஜய்தான்.!
அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக மலையாளத்தில் தயாராகியுள்ள திரைப்படம் சேஷம் மைக்கில் ஃபாத்திமா. இந்தப்படத்தை,ஃ பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது தி ரூட் நிறுவனம்.
.ரிவால்வர் ரீட்டா என்கிற திரைப்படம் இந்த நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாகும். கீர்த்தி சுரேஷ் முக்கிய நடிகை..ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய சந்துரு, இந்தப்படத்தை இயக்குகிறார்.
கோலிவுட்டின் வித்தியாசமான பார்வை ஜெகதீஷ் மீது விழுந்தது.
பழம் தின்று கொட்டை போட்ட தயாரிப்பாளர்கள் திணறுகிற காலத்தில் ஜெகதீஷ் எப்படி தயாரிப்பாளராக இறங்கினார்?இவருக்கு எது அவ்வளவு பணம்,?
கோலிவுட்டின் உயர் மட்ட ரகசிய குழுவினர் கண்டு பிடித்த ரகசியம் தி ரூட் நிறுவனத்தின் சார்பில் திரைப்படங்கள் தயாரிப்பதற்காக நடிகர் விஜய் சுமார் முப்பது கோடியை ஜெகதீஷிடம் கொடுத்துள்ளார் என்றும் அந்தப்பணத்தை முதலீடாகக் கொண்டே படங்கள் தயாரிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தத் தகவல் முழு உண்மை என்றால், சேஷம் மைக்கில் ஃபாத்திமா மற்றும் ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்களின் ஒரிஜினல் ஓனர் விஜய் தான் என்கிறார்கள்.