
பனை மரத்தைச் சார்ந்து வாழும் பனையேறிகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘நெடுமி’.இப்படத்தை நந்தா லட்சுமணன் இயக்கியுள்ளார். ஹரிஸ்வர் புரொடக்ஷன்ஸ் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் பேரரசு, பயில்வான் ரங்கநாதன், எடிட்டர் ராம்சரண் , ஒளிப்பதிவாளர் விஸ்வாமதி ,நடிகர் ஏ. ஆர். ராஜேஷ் ,இசையமைப்பாளர் ஜாஸ் ஜே.பி. கதாநாயகன் பிரதீப் செல்வராஜ் ,படத்தின் கதாநாயகி அபிநயா ,நடிகர் ராஜசிம்மன், படத்தின் இயக்குநர் நந்தா லட்சுமணன் , தயாரிப்பாளர் வேல்முருகன், ஆக்சன் ரியாக்சன் நிறுவன ஜெனிஸ் , டி3 படத்தின் இயக்குநர் பாலாஜி, பயில்வான் ரங்கநாதன் , கேபிள் சங்கர்,ஆகியோர் பேசினார்கள்.

பாஜகவை சேர்ந்த இயக்குநர் பேரரசு பேசும்போது,சில கருத்துகளை சொன்னார்.
“பனை மரத்திற்குத் தமிழ்நாட்டில் பல சிறப்புகள் உண்டு. பனை மரத்தின் சிறப்புகளைப் பேசும் வகையில் இந்தப் படம் உருவாகி இருப்பது மகிழ்ச்சி.
கள் குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு கிடையாது .சிறிய போதை தரும் அவ்வளவுதான் உடலைக் கெடுக்காது.அப்படி இருந்தும் கள்ளுக்கடைகளை ஊருக்கு ஒதுக்குப் புறமாக அந்தக்காலத்தில் வைத்தார்கள். ஆனால் இப்போது தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் வந்து விட்டன. என்னைக் கேட்டால் டாஸ்மாக்கில் கள்ளை விற்கலாம் .அதற்கு ஒரு விலைய வைத்துக் கொள்ளுங்கள்.
உடலை கெடுக்கும் மதுவை விட ஊட்டச்சத்து நிறைந்த கள் எவ்வளவோ மேல்.
கள்ளை டாஸ்மாக் கடையில் விற்க வைத்து அதை நம்பி இருக்கும் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்.”என்று வலியுறுத்தினார்.