“விஜய்யுடன் ஜாலி டூர் போனா என்னய்யா,தப்பே இல்ல.”என்று செவிட்டில் பளார் விட்டிருக்கிறார் வாரிசு நடிகை ராஷ்மிகா .
உடனே நம்ம ஊரு விஜய்னு கெஸ் பண்ணிடாதீங்க. அக்கட தேசத்து விஜய் தேவரகொண்டா .பெரிய ஹீரோ.
தன்னுடைய திரைப்பட வெற்றிகளை விட அதிக அளவில் முதுகில் குத்து வாங்கி வருகிறார் ராஷ்மிகா .இருவரும் காதலர்கள் என கிசு கிசு அதிக அளவில் வாங்கி வருகிறார்கள். அண்மையில் இருவரும் தனித்தனியாக பிளைட்டில் பயணித்தாலும் சங்கமம் ஆனது மாலத்தீவில்.!
விஜய்யின் கருப்புக்கண்ணாடி ராஷ்மிகாவின் முகத்தில் முத்திரை குத்தி காட்டியதற்குப் பிறகுதான் அந்த உல்லாசத்தீவின் பயணம் அறிவிக்கப்படாத தேனிலவோ என சந்தேகிக்கத் தோன்றியது.
ஊடகங்களின் எழுத்துகள் காதலர்கள் என்பதாக முத்திரை குத்தியது.
கோபம் வந்தது நடிகைக்கு.!
“நானும் விஜய்யும் நல்ல நண்பர்கள்.நண்பருடன் பயணம் செய்வது தப்பே இல்லை. ட்ரோல் பண்ணுவதை எந்த அளவுக்கு சகிக்க வேண்டுமோ ,சகித்துக்கொள்ளலாம். ஆனால் அளவு எல்லை தாண்டினால் திருப்பி அடிக்கப்படும். நடவடிக்கை பாயும்” என்பதாக சொல்லியிருக்கிறார்.