தயாரிப்பாளர் சங்கத்தை பத்திரிகை மூலம் அவதூறாக பேசிய (சண்டக்கோழி)நடிகருக்கு மன்னிப்பு கேட்க தயாரிப்பாளர் சங்கம் ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்தும், . முதலில் அதிகாரபூர்வ நோட்டீஸ் வரட்டும், அப்புறம் பார்க்கலாம் என தெனாவெட்டு காட்டிய நடிகருக்கு, தயாரிப்பு சங்கம் சார்பில் தற்போது, ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப் பட்டுவிட்டது என்கிறார்கள். அவரோடு இன்னும் மூன்று தயாரிப்பாளர்களுக்கும் சேர்த்தே அனுப்பப்பட்டுள்ளதாம்.அதே சமயம்,தலைவருக்கு எதிரான தயாரிப்பாளர்களிடம் ரகசிய கூட்டம் போட்டு ஆதரவு திரட்டி வரும் நடிகரோ, இப்போதே தேர்தலில் போட்டியிடுவதற்கான வேலைகளை சத்தமே இல்லாமல் தொடங்கிவிட்டார் என்றும் கோடம்பாக்க ‘பொல்லாங்’ குழல் ரகசிய தகவலை ஊதுகிறது.