ஆணாதிக்கம் வருவதற்கு பெண்களின் சமையலறைதான் காரணமா?
பொதுவாக சமையலில் கில்லாடிகள் ஆண்கள்தான் என்பதை நலனை வைத்துச் சொல்வார்கள் .தென் மாவட்டங்களில் தவசிப்பிள்ளைகள் சமையல் இன்றும் இருக்கிறது.
ஆனால் காலப்போக்கில் சமையலறை ராணிகளாக பெண்களாகி விட்டார்கள்.அந்த அறைதான் அவர்களது சாம்ராஜ்யம்,சமைப்பது ,கணவனுக்கு கட்டில் சுகம் தருவது.ஒரு போகப் பொருளாகவே இன்று வரை பெண்கள் இருந்து வருகிறார்கள்.
இதை மய்யமாக வைத்து கேரளத்தில் வந்த கதையை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் கண்ணன்.
மலையாளத்தில் நிமிஷா சஜயன் செய்த கேரக்டரை தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் செய்திருக்கிறார்.ஒப்பீடு செய்வது நல்லதல்ல.
ராகுல் ரவீந்திரனின் மனைவி ஐஸ்வர்யா ராஜேஷ்.வசதியான குடும்பம் மாமனார் ,மாமியார் என கைக்கு அடக்கமான குடும்பம்தான்..
ஆதிக்க மனம் ,.முருங்கக்காய்,எலும்புகள் இவைகளை டைனிங் டேபிலேயே துப்பிவிடுவது என்கிற பழக்கம் , லைட் அணைப்பதே சுகத்துக்குத்தான் என்பதை வீட்டுக்கு வந்த மருமகள் எப்படி சமாளிக்கிறார் என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
முதல்முறையாக மாமனார் வீட்டில் ஏற்படுகிற அசவுகரியங்களை அவ்வளவாக எடுத்துக் கொள்ளவில்லை.இயல்புடன் வெளிப்படுத்திவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். கணவனுக்கு ஒரு மாதிரி ,மாமனாருக்கு ஒரு மாதிரி என வேலை பார்க்கிற நிலை.சமையலைறையில் டப் குழாய் ஒழுகலை கூட சரி செய்ய முடியாத கணவனின் அலட்சியம் ,மாதவிடாய் சமயத்தில் காட்டப்படுகிற அருவெறுப்பு நிலை ..இவை எல்லாமே ஐஸ்வர்யா ராஜேசுக்கு சவாலான காட்சிகள்.
“லைட்டை அணைக்கவா ?”என்று கணவன் ராகுல் ரவீந்திரன் கேட்டதும் “இப்படி செஞ்சா வலிக்குதுங்க .ஃ போர் பிளே பண்ணலாமா ?”என்று கேட்கும் போது கடந்த நாட்களின் வலி ,வேதனை தெரிகிறது.கண்ணீர் வழிய திரும்பி படுக்கிறபோது ….சிறப்பான நடிப்பு.
அய்யப்பனுக்கு மாமனும் புருசனும் மலைக்கு பயணமாக வீட்டில் பூஜை. இடையில் கணவன் “ரெண்டு காப்பி”என்று குரல் கொடுக்கிறான் .அப்ப பொங்குவார் பாருங்கள் ஐஸ்வர்யா பூகம்பமே வெடிக்கிறது அந்த வீட்டில்.!
போடா புடுங்கி என்று வெளியேற புருஷன் மறு மணம் செய்து கொள்ள இதுதான்யா கிச்சன் ராணிகளின் கதை என்று முடித்திருக்கிறார்.
கிளை மாக்சில் என்ன சொல்ல வேண்டும் என்பதில் கண்ணனுக்கு தடுமாற்றம் போல.
ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம் புண்ணியம் கட்டிக்கொள்கிறார். கணவனாக நடித்துள்ள ராகுலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பார்க்கலாம்.