எஸ்விசி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ‘கீத கோவிந்தம்’ பரசுராம், ‘வாரிசு’ தில் ராஜு மற்றும் ஷிரிஷ் போன்ற நட்சத்திர படத்தயாரிப்பளர்கள் இணைந்து தயாரிக்கும் மெகா பட்ஜெட் படத்தில் விஜய் தேவரகொண்டா இணைகிறார்.
இது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தனித்துவமான கதையாக உருவாகும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் நடிகர்கள், படக்குழுவினர் விவரங்கள் மற்றும் படம் குறித்தான அடுத்தடுத்த விவரங்கள் விரைவில் வெளியாகும்.என்கிறது படக்குழு.