கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய ‘காந்தாரா’. திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், காந்தாரா படத்தின் 100வது நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய நாயகன் ரிஷப் ஷெட்டி, தற்போது வெளியாகி உள்ள காந்தாரா படம் தான் இரண்டாம் பாகம் என்றும், இதற்கு முந்தைய பாகத்தை அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும்,
முதல் பாகத்தில் காந்தாரா தெய்வத்தை பற்றிய விரிவாக சொல்ல உள்ளதாகவும் கூறிய ரிஷப் ஷெட்டி, ‘‘காந்தாரா’வின் வரலாறு இன்னும் ஆழமானது. காந்தாரா’ கடவுள் குறித்த ஆய்வு ஆரம்பக்கட்டத்தில் உள்ளதால் இது குறித்து நிறைய விஷயங்களை தற்போது பகிர்ந்து கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.