ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் – அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இவ்விழாவில், இயக்குநர் கணேஷ் கே பாபு பேசியதாவது, “கவின் மற்றும் அபர்ணா இருவருமே தங்களை முழுமையாக ஒப்படைத்து இந்தப் படத்தைக் கொடுத்துள்ளனர். இவர்கள் இடத்தில் வேறு எந்த நடிகர் இருந்தாலும் இவர்கள் அளவிற்கு நடித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். கவினுக்கு என்னுடைய நன்றி. தமிழ் சினிமாவில் 2023-ல் சிறந்த நடிகராக கவின் இருப்பார். அபர்ணா அவருடைய அறிமுகத்துக்காக நிறைய விருதுகள் வாங்குவார். பொதுவாக ரெட்ஜெயண்ட் மூவிஸ் அனைத்துப் படங்களையும் வாங்க மாட்டார்கள். ஆனால், அவர்கள் இதில் ஆர்வம் காட்டி வாங்கியதில் மகிழ்ச்சி.
கதாநாயகி அபர்ணாதாஸ் பேசியதாவது, “கதாநாயகியாக நான் நடித்த முதல் தமிழ்ப் படம் இது என்பதால் எனக்கு எமோஷனலாக இருக்கிறது. கேரளாவுக்கு வந்து கதை சொன்னதில் இருந்து படம் முடியும் வரை எனக்கு உறுதுணையாக நின்ற என் இயக்குநர் கணேஷூக்கு நன்றி. என்னை இயக்குநரிடம் அறிமுகப்படுத்தியது கவின்தான். கவின் இல்லை என்றால் இந்தப் படத்தில் நான் இல்லை. தமிழ் சினிமால் இது என் சிறந்த தொடக்கமாக இருக்கும்” என்றார்.
நடிகர் கவின் பேசியதாவது, ”நான்கு வருடங்களாக ‘டாடா’ படத்திற்காக நாங்கள் திட்டமிட்டோம். இத்தனை வருடங்களும் நாங்கள் இந்தப் படம் சிறப்பாக வரவேண்டும் என்றுதான் உழைத்தோம். பிரதீப், பாலு நாங்கள் அனைவருமே கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள். என் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கைதான் இவ்வளவு தூரம் படத்தைக் கொண்டு வந்துள்ளது. எனக்குத் தெரிந்த பாபு இவ்வளவு மெச்சூர்டான கண்டெண்ட் யோசிப்பானா என்பது தெரியாது. எங்கள் கதை மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் அம்பேத் சாருக்கு நன்றி. ஜென் மார்ட்டின் அருமையான இசையைக் கொடுத்துள்ளார். எழில் பிரதரும் சிறப்பான அவுட்புட்டைக் கொடுத்துள்ளார். இந்தக் கதாபாத்திரத்தை ஒத்துக் கொண்ட அபர்ணாதாஸூக்கு நன்றி. அபர்ணாவை நான் முதன்முதலில் ‘பீஸ்ட்’ செட்டில்தான் பார்த்தேன். கதை மேல் இருந்த நம்பிக்கை அவர் மேலேயும் இருந்தது. சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளார்.