தமிழ்த்திரையுலகில் நடிகை ஸ்ரீதேவி.கடந்த 1967 இல் வெளிவந்த ‘கந்தன் கருணை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ‘துணைவன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘மூன்று முடிச்சு’ ‘16 வயதினிலே’ ‘சிகப்பு ரோஜாக்கள்’ ‘மூன்றாம் பிறை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தித் திரையுலகிலும் கால் பதித்தார்.
கடந்த 50 வருடங்களில் எம்.ஜி.ஆர்,சிவாஜி, ரஜினி, கமல், சிரஞ்சீவி, சல்மான்கான், ஷாருக்கான் என அனைத்து இந்திய கதாநாயக நடிகர்களுடனும் இணைந்து 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் மேலும் பத்மஸ்ரீ, தேசிய திரைப்பட விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், மாநில அரசு விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்
கடந்த 1996 ஆம் ஆண்டு பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பின்னரும் நடிப்பில் கவனம் செலுத்தி அவர் இறுதியாக ‘இங்கிலீஷ் விங்கிலிஷ்’ ‘ மாம்’, புலி ஆகிய படங்களில் நடித்தார். இவருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரு மகள்கள் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மது போதையில் குளியலறை தொட்டிக்குள் விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார். இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த அவரது இறப்பு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்கை வரலாறு தற்போது புத்தகமாக வர இருக்கிறது. இந்த புத்தகம் ‘ஸ்ரீதேவி- தி லைஃப் ஆஃப் எ லெஜண்ட்’ என்ற பெயரில் வரவிருக்கிறது. இந்தப்புத்தகத்தை பிரபல எழுத்தாளர் தீரஜ் குமார் எழுதியிருக்கிறார்.இது குறித்து பிரபல படத்தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் கூறுகையில்,
“ஸ்ரீதேவி இயற்கையின் சக்தி. தனது கலையை அவர் திரையில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டபோது மகிழ்ச்சியாக இருந்தார். அதேசமயம், அவர் தனிமை விரும்பியாகவும் இருந்தார். தீரஜ்குமாரை ஸ்ரீதேவி தனது குடும்பத்தில் ஒருவராகவும் கருதினார். அவர் ஒரு ஆய்வாளர், எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர். ஸ்ரீதேவியின் அசாதாரண வாழ்க்கையை அவர் புத்தகமாக எழுதுகிறார் என்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்