கடந்த 2016-ம் ஆண்டு ‘பூ’ சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது பிச்சைக்காரன்-2 உருவாகி வருகிறது.இந்தப் படத்தை விஜய் ஆண்டனி நடிப்பதோடு இயக்கியும் வருகிறார்
இந்நிலையில் பிச்சைக்காரன்-2 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள லங்காவி கடல் பகுதியில் நடந்த போது ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆண்டனிக்கு முகம் மற்றும் உதடு தாடை பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.உடனடியாக அறுவை சிகிச்சையும் நடந்தது..
இதையடுத்து மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த விஜய் ஆண்டனி, கடந்த இரண்டாம் தேதி, தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பு இதயங்களே நான் 90% குணம் அடைந்துவிட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன் அன்புக்கு நன்றி” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பிச்சைக்காரன் 2’ படத்தின்டிரைலர் நாளை வெளியாகும் என்றும், இந்த ட்ரெய்லர் வழக்கமான ட்ரெய்லராக இல்லாமல், படத்தின் முதல் 4 நிமிட காட்சிகள் ஸ்னீக்பீக்காக நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என குறிப்பிட்டுள்ள விஜய் ஆண்டனி, “பணம் உலகை காலி பண்ணிடும்” என்றும் பதிவிட்டுள்ளார். இப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.