நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் த்ரிஷா. மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கவுதம் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்பட பலர் நடித்து வருகின்றனர் இந்த படப்பிடிப்புக்காக படக்குழு சமீபத்தில் தனி விமானத்தில் காஷ்மீர் சென்றனர்.தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிலவி வரும் கடும்பனியின் குளிரிலும் மும்மரமாக நடந்து வருகிறது. , இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் லியோ படத்திற்கான படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதில்,விஜய், லோகேஷ் கனகராஜ், அன்பறிவு, கெளதம் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்ளிட்டோர் ‘ தீ’யை மூட்டிக்கொண்டு குளிர் காயும் (camp fire) காட்சி இடம்பெற்றுள்ளது.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.