தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா. இவர் சென்னையில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சுஜாதா. நடிகையும், இயக்குநருமான விஜய நிர்மலா இவரது சொந்த இவரது அத்தை ஆவார்.
நடிகை ஜெயசுதா தனது 12 வயதில் கமல்ஹாசனுடன் 1972 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பண்டாண்டி கபுரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழில் ‘அரங்கேற்றம்’ திரைப்படத்தில் இயக்குநர் பாலசந்தரால் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள் போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 1982 ஆம் ஆண்டு காகர்லபுடி ராஜேந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
இதையடுத்து வடே ரமேஷ் என்பவருடன் நெருக்கம் காட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 1985 ஆம் ஆண்டு நடிகர் ஜீதேந்திராவின் உறவினரான தயாரிப்பாளர் நித்தின் கபூர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். நித்தின் கபூர் கடந்த 2017ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் ஜெயசுதாவுககு நிஹார், ஷ்ரேயன் என இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெயசுதா சமீபத்தில் வெளியான ‘வாரிசு’ படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ளார். வாரிசு திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவருடன் நடிகை ஜெயசுதா கலந்து கொண்டார்.
அவர் தான் ஜெயசுதாவின் மூன்றாவது கணவர் என்றும்,ஜெயசுதா அமெரிக்காவுக்கு ஓய்வு எடுக்க சென்று இருந்ததாகவும், அங்கு வைத்து தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது.
இந்த வதந்திகளை மறுத்துள்ள ஜெயசுதா, பிலிப் ரூல்ஸ், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் என்றும், அவர் தன்னைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார். திரைப்படத் துறையில் தனது பங்கைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்வதற்காக அவர் தன்னுடன் வருவதாகவும், மேலும் அவர்களின் உறவுக்கு வேறு எதுவும் இல்லை என்றும் அவர் கூறி இருந்தார்.
ஆனால் தற்போது 64 வயதான நடிகை ஜெயசுதா வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், இருவரும் தற்போது சென்னையில் உள்ள வீட்டில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஜெயசுதா தரப்பில் இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் நடிகை ஜெயசுதா தனது புதிய கணவருடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.












