‘மேயாத மான்’,’ஆடை’ உள்ளிட்ட படங்களின் இயக்குனரும்,’மாஸ்ட’, ‘விக்ரம்’,மற்றும் தற்போது உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் வசனகர்த்தாவுமான ரத்னகுமார் கடந்தாண்டு சந்தானம் நடிப்பில் வெளியான’குலு குலு’ படத்தை இயக்கியிருந்தார்.
இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.இந்நிலையில் இப்படத்தை தற்போது தெலுங்கிலும் படக்குழு வெளியிட்டுள்ளது. . ஆனால், அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘இந்திய பிரதமர்’ என்ற ஒரு காட்சியை தணிக்கைக்குழு அப் படத்தின் இயக்குநர் ரத்னகுமாரிடம் கருத்து எதுவும் கேட்காமலே நீக்கிவிட்டதாம்.
குறிப்பிட்ட அந்த காட்சியை மட்டும் நீக்கியதற்கான விளக்கத்தையும் தணிக்கைக்குழுவினர் அளிக்க வில்லையாம். . இதனால் ஆவேசமடைந்த இயக்குநர் ரத்னகுமார் தனது டிவிட்டரில்,””ஜனநாயகத்தில் கலை என்பது முக்கியமான தூண். அத்தகைய கலை மீது திரைப்பட தணிக்கைக்குழு மிகவும் கடுமையாக நடந்து கொள்கிறது.
தமிழ்நாட்டை தமிழகம் என மாற்ற முயல்வதற்கு பதில், இந்தியாவை United States of India என பெயர் மாற்றம் செய்துவிடுங்கள்” என ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளார். இப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.