லேடி சூப்பர் ஸ்டார் பற்றி மாளவிகா மோகனன் கருத்து சொன்னாலும் சொன்னார் அவரை நயன்தாராவின் ரசிகர்கள் சண்டைக்கு இழுத்து சந்திக்கு கொண்டு வந்து விட்டார்கள்.
சூப்பர் ஸ்டார் என்பது நடிகருக்கும் பொருந்தும் நடிகைக்கும் பொருந்தும்.
“இதில் என்ன லேடி சூப்பர் ஸ்டார்? சூப்பர் ஸ்டார் என்பதே போதும்.”என்று மாளவிகா மோகனன் கூறியிருக்கிறார்.
“அப்படி கூப்பிடுவது எனக்கு பிடிக்கல. நடிகர்கள் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப் படுகிறார்கள்.நான் ஒன்னும் நயன்தாராவை குறிப்பிடவில்லை.பொதுவாகத்தான் சொன்னேன்.நயன் மீது பெரிய மரியாதை வைத்திருக்கிறேன்.எனக்கு சீனியர்.அவரது கலை உலக பயணம் சிறப்பானது.ஆகவே அமைதியாக இருங்கள்.சிறு பத்திரிகையாளர்களே கொந்தளிக்காதீர்கள்.”என்று சொல்லியிருக்கிறார்.
நயன்தாராவின் ரியாக்சன் என்ன?
“அந்த நடிகை என் பெயரைக்குறிப்பிடாமல் என்னைப்பற்றித்தான் அப்படி சொல்லியிருக்கிறார்.தெலுங்கு படத்தில் ஆஸ்பத்திரி சீனில் அழகாக இருப்பதை குறிப்பிட்டு அவ்வாறு நோயாளி இருக்க முடியுமா என்று கேட்டிருந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்கள் அழகாக இருக்கக்கூடாதா?”என்று கேட்டிருந்தார்.