விக்ரம் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.இதன் படப்பிடிப்பு,பல்வேறு தடங்கல்களைத் தாண்டி,சென்னை, ஐதராபாத், திருப்பதி என பல இடங்களில் நடத்தப்பட்டு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், நாளை முதல் இதன் படப்பிடிப்பு சென்னையில் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2020-ல் சென்னை புறநகர் பூந்தமல்லி அருகே உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பில், கிரேன் அறுந்து விழுந்த விபத்தின் போது எடுக்க முடியாமல் போன காட்சிகளை மீண்டும் படமாக்க உள்ளாராம் இயக்குனர் ஷங்கர்.
இதற்காக நடிகர் விஜய் குடியிருக்கும் பனையூரில் பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருவதாகவும்,இதில் கமல் நடிக்கும் காட்சிகளை மட்டும் ஷங்கர் இயக்கி வருவதாகவும்,
மற்ற பகுதிகளை இரண்டாவைத்து யூனிட்டாக செயல்பட்டு வரும் ஷங்கரின் முன்னாள் உதவி இயக்குனர்கள் வசந்தபாலன், சிம்புதேவன் ஆகியோர் படமாக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.