அங்காடித்தெரு’, ‘அரவான்’, ‘காவிய தலைவன்’, ‘ஜெயில்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரமேஷ் பழனிவேல், ‘டீமன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்கம் மட்டுமின்றி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
ரோனி ரஃபேல், இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கார்த்திக் நேத்தா பாடல் வரிகளை எழுதுகிறார். ஆர்.எஸ். ஆனந்த குமார் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் கதை, நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இதன் திரைக்கதை அம்சங்கள் நிச்சயம் பார்வையாளர்களை கவரும். ஹாரர்- சஸ்பென்ஸ்- த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கக்கூடிய இந்தப் படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கும் பிடித்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் லிங்குசாமி வழங்கிய ‘பிகினிங்’ படத்தில் கதாநாயகனாக நடித்த சச்சின் இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘தேன்’ படத்திற்காக பல விருதுகளை பெற்ற அபர்நதி இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.
கும்கி அஸ்வின், இன்ஸ்டாகிராம் சென்சேஷன் ரவீனா தாஹா, பிக் பாஸ் புகழ் ஸ்ருதி பெரியசாமி, மிப்புசாமி, பிரபாகரன், அபிஷேக், தரணி, நவ்யா சுஜி, சலீமா மற்றும் பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திகைப்பூட்டும் திரைக்கதை மற்றும் புதிய விசித்திரமான காட்சி அமைப்புடன் கூடிய ‘Demon’, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய திரை அனுபவத்தை விரைவில் வழங்கவுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் பல அறிமுக இயக்குநர்களுடன் படங்கள் செய்யத் திட்டமிட்டுள்ளது, இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.