பான் இந்திய நட்சத்திர நடிகராக வலம் வரும் நடிகர் பிரபாஸ் தனக்கு அளித்த ‘சிறப்பு விருந்து’ குறித்து நடிகை தமன்னா கூறியுள்ளதாவது, ” பிரபாஸின் விருந்தோம்பல் உலகளவில் மாயாஜாலமிக்க தனித்துவமானது உணவு மேஜையின் முன் பிரம்மாண்டமான அளவில் முப்பதிற்கும் மேற்பட்ட உணவு வகைகளை நேர்த்தியாக அலங்கரித்திருப்பார்.
காந்தம் போன்ற மாயஜால வித்தையைக் காண்பது போலிருக்கும். இது அவர் விருந்தினர் மீது வைத்திருக்கும் அதீத அன்பை வெளிப்படுத்துகிறது. எளிமையான உதாரணத்துடன் சொல்ல வேண்டும் என்றால், நாட்டை ஆளும் மகாராஜாவிற்கு இணையானவராக பிரபாசை சொல்லலாம்.
அவரின் விருந்தோம்பல், மற்றவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அவருடன் பணியாற்றும் சக நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவர் மீதும் அவர் காட்டும் அக்கறையுடன் கூடிய அரவணைப்பு அலாதியானது. அவரது இந்த விருந்தோம்பல் பண்பு அவருடன் பணியாற்றும் சூழலை எப்போதும் இதமாக வைத்திருக்கும். ” என கூறியுள்ளார். இதனிடையே நடிகை தமன்னா மட்டுமல்ல.. நடிகைகள் பூஜா ஹெக்டே, ஸ்ரத்தா கபூர், ஸ்ருதிஹாசன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் என ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் பிரபாசின் விருந்தோம்பல் குறித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதும், குறிப்பிடத்தக்கது.
தற்போது பிரபாஸ் ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’, ‘ப்ராஜெக்ட் கே’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நடிகை தமன்னா, நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.












