ஆதித்த கரிகாலனாக பொன்னியின் செல்வனில் கலக்கிய நடிகர் விக்ரம், தற்போது பா ரஞ்சித் இயக்கிவரும் தங்கலான் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார்.
‘கேஜிஎப்’ மக்களின் வாழ்க்கையை சொல்லு வகையில்,பீரியட் படமாக உருவாகிவரும் இப்படத்தின்படப்பிடிப்பு சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து வரும் நிலையில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் தற்போது கேஜிஎப்பில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர் விக்ரமின் வித்தியாசமான மிரட்டல் கெட்டப்புடன் கூடிய புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.