நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்’.இதில், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனி, ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, வினாயகன், யோகிபாபு, மோகன்லால் உள்ளிட்டபல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
தற்போது மும்முரமாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், ஜெய்சல்மர் ஆகிய இடங்களில் தொடர்ந்து, தற்போது மங்களூரில் முக்கியமான சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது.
இதில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார் இருவரும் கலந்து கொண்டு நடித்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த படப்பிடிப்பில் யோகிபாபு கலந்து கொண்டு நடிக்கிறார்
படப்பிடிப்பு தளத்திலிருந்து ரஜினிகாந்த், சிவராஜ்குமார், யோகிபாபு ஆகியோரின் புகைப்படங்களும் தற்போது வெளியாகி உள்ளன.இந்நிலையில் அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியுள்ளாராம்